காதலனைத் தேடி

ஒரு நொடியும் உன் நினைவு அகலாமலே
உடையாத குமிழ் போல் நான் மிதக்கின்றேன். . .
முடியாத ரயில் பாலம் ஒட்டாதென
அறியாத ரயில் போல் நான் ஓடுகின்றேன். . .

கடல் சூழ்ந்த தீவினிலே கானலேது
நீ சுகம் கொள்ள என் காதல் குறைவதேது. . .
எப்படி நீ இருந்தாலும் இப்படியே
எனை நோகடிக்க இதயம் இசைத்திருக்கும். . .

உன்னை சேராத என் கண்கள் சோர்ந்தால் கூட
உயிர் பார்வயே நீயென பார்த்திருப்பேன். . .
குரல் கேட்காத ஏக்கங்கள் கரைக்கும்போது
காற்றே நீயென கர்பனை செய்வேன். . .

கோடியாய் ஆசைகள் குவிந்த போதும்
காணாத உன் கண்ணால் கண்ணீரே வரம். . .
உன் கை தீண்ட காலமெல்லாம் உயிர் ஜனித்து
கவிச்சிலையாய் காத்திருக்க தயக்கம் இல்லை. . .

ஒரு வேளை உன் நினைவில் நான் மறைந்தால்
உயிர் வாழ ஒன்றும் இல்லை மறித்திடுவேன். . .
மறித்த பின் மனவலியை நீ உணர்ந்தால்
மழைத்துளியாய் வந்துன் கண்ணம் துடைப்பேன். .!!

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (25-May-14, 10:43 pm)
பார்வை : 118

மேலே