காதலின் அஹிம்சை

காதலின் அகிம்சை:
என் காதல்:

செவ்வான சாலையில்
நீ நடந்து செல்லும்போது
உன்னோடு நானும்
நிழலாய் போவேன் மெல்ல

என் வானமெங்கும்
உன் பேரை சொல்லும்போது
என் கண்ணிலேனோ
காதல் அரும்பிச் செல்ல

இந்நாளை எண்ணி
கனவை நானும் கண்டபோது
எங்கேயோ பறந்தேன்
வானில் இருக்கும் நிலவைப்போல

எந்நாளும் உன்னை
கண்ணில் வைத்து காக்கும்போது
தன்னாலே மிதப்பேன்
கடலில் செல்லும் கப்பல்போல

இவ்வாறு என்று
உன்முன் வந்து சொல்லும்போது
என்னையே மறந்தேன்
உன்னோடு வாழ்ந்து கொள்ள

எவ்வாறு சொல்வாய்
என்று நானும் எண்ணும்போது
உள்ளூரே துடித்தேன்
உன்னோடு வாழ வல்ல

என்காதல் என்னவென்று
நீயும் புரிந்து கொள்ளும்போது
இவ்வுலகை வென்றேன்
தன்னாலே சொல்லி கொள்ள

எதேதோ சொல்லி
என்னை நீ மறுக்கும்போது
என்னுயிரை துறப்பேன்
இன்றோடு மெல்ல மெல்ல...

எழுதியவர் : prabakaran (26-May-14, 1:23 pm)
Tanglish : kathalin ahimsai
பார்வை : 68

மேலே