அன்னை

நீ என்னை சுமந்தாயா.........?
இல்லை, சுகமாய் நினைத்தாய்

எட்டி உதைத்தவனை
எண்ணி வயிற்றில்
என் பிள்ளை வளர்ந்துவிட்டான்
என்றவள் நீ..............

பசி அறிந்து ஊட்டியவள் நீ
நான் வளர தேய்ந்தவள் நீ
என் துணிகள் ஜொலிக்க அழுக்கானவள் நீ
நான் கறி உண்ண முகத்தில் கரிப்பட்டு
இருந்தவள் நீ

நான் அயர மடி தந்தவள் நீ
நான் உயர ஏணி ஆனவள் நீ
நான் கரை சேர தோணியானவள் நீ

அம்மா வார்த்தைகள்
போதாதம்மா

வானளவு எழுதினாலும் நீ
அவைகளை காட்டிலும் உயர்வாய்
இருக்கிறாய்.......

இறைவா
ஏழ்ப் பிறப்பும் அவளை
தாயாய் கொடு
இல்லையேல் எனக்கு
பிறவாமை கொடு

அவள் அற்ற வாழ்வு
வேண்டாம் எனக்கு

எழுதியவர் : கவியரசன் (27-May-14, 12:56 pm)
Tanglish : annai
பார்வை : 231

மேலே