சிந்தை கலங்கட்டும்
மாற்றமா மடத்தனம்
சொல்லும் நீ பைத்தியம்
ஆகா என்ன ஓர்
பட்டம்......
வீதிச் சிறுவர்கள் என
அறியாது வளர்ச்சி நோக்கி அழைத்தேனே
நான் பைத்தியம். ........
கோழைகள் என அறியாது
கோடாரிகள் முன் நிறுத்த முயன்றேனே
நான் பைத்தியம். .......
வீணர்களை எல்லாம் நல்லதோர்
வீணைக்கு அழைத்தேனே
நான் பைத்தியம். .......
இடுகாட்டில் வாழ்பவனை
நல்லிட நாட்டில் வாழ வைக்க முயன்றால்
நான் பைத்தியம். ......
ஆம்
அம்மணங்களின் மத்தியில்
கோமணம் பைத்தியமே.......
ஹா ஹா ஹா ஹா. ......ஹா
என் சிரிப்பொலிகளிலேயே
என் சிந்தை கலங்கட்டும்.........