எப்பொழுது சுடும்
எழில்மிகு சோலைகள்
சுழல்மிகு மேகங்கள்
அறிவில்லா அறிவியலுடன்
காணவில்லை காற்றோடு..,
ஒபாமா கண்டுகொள்ளவில்லை
ஓசோனின் ஓட்டையை
காரணமோ நம்கண்ணறிந்த
அழகான அமெரிக்காவும்
அமைதியான ஜப்பானும்..,
துப்பட்டாக்கள் சேலைகளானது
சோலைகள் சாலைகளானது
கனவுகள் காஸ்ட்யுமாய் மாற
மருதானி கோணானது
மரிக்கொழுந்து மாறிப்போனது..,
வெளிநாட்டு அப்பாவை
ஐ! அப்பா என சந்தோஷமாய்
கட்டிய குழந்தை -இன்று
i pad எங்கே என்கிறது..,
தாத்தா துபாய்
தகப்பன் சிங்கப்பூர்
தாயும் பாட்டியும்
தகவலறியா புத்தகங்கள்
இந்தியாவும் இருக்கிறது
ஏதுமறியா மழலையாய்...,
இயல்பான மனிதரில்லை -பல
இன்றியமையா மூலாதாரங்கள்
இருந்தும் பயனில்லை..,
நாட்டுப்பற்றென பாதிபேர் புலம்ப
பத்திகுச்சியாய்
நம்மீதுஉரசினாலும்
நெருப்பு வந்தது
இன்னும் யாரையும்
சுடவில்லை....