இந்த உலகமே உன் பின்னால்
நாம் நடக்கின்ற பாதை
ஏற்கனவே வேறு ஒருவர்
சென்ற பாதை...!
அந்த பாதையில்
சென்றால் நீ இன்னொருவர்
பின்னால் சென்று
கொண்டிருக்கிறாய் என்று
பொருள்...!
அவ்வாறு செல்லும் போது
அவர்களின் சாதனைகள்
மட்டுமே மற்றவர்களுக்கு
தெரியும்..!
உன்னை இந்த உலகம்
புரிந்து கொள்ளவேண்டுமெனில்
உனக்கென்று ஒரு நல்ல
பாதை அமைத்து,அந்த
பாதையில் மற்றவர்களை
அழைத்துச் செல்...
இந்த உலகமே உன் பின்னல்
வரும் என்பதை மறந்துவிடாதே..!!!