சடலத்தின் சலனம் உயிரை பிரிந்த உடலின் புலம்பல்
அடி என்னவளே …!
நீ என்னுள் இருந்தபோது
திரும்பிகூட பாராதவர்கள்
இன்று திகைத்து போய்
பார்க்கிறார்கள்
நீயில்லா என் தனிமையை....
அன்று வேண்டா வெறுப்பாய்
பார்த்தவர்கள்
இன்று வேதனையோடு பார்கிறார்கள்
நீயில்லா என் தனிமையை …….
அன்று அருந்த
தண்ணீர் கூட தராதவர்கள்
இன்று பால் ஊற்றுகிறார்கள்
நீயில்லா என் தனிமையில் …….
சொன்னால் நம்ப மாட்டாய்
நீயில்லா என் தனிமை
அத்தனை சுகமாயுள்ளது ….
ஆம் அன்று தட்டு தடுமாறி
நடந்தபோது
தாங்க கூட வராதவர்கள்
இன்று படுக்க வைத்து
பத்திரமாய் அழைத்து செல்கின்றனர்
இறுதிபயனத்தை நால்வராய் ….
நீயில்லா என் தனிமையில் …….
ஓரடி நிலம் தர
யோசித்தவர்கள்
ஆறடி நிலம் அளித்துள்ளார்கள்
நீயில்லா என் தனிமையில் ……
என்ன ? என் பெயர்தான்
மாற்றி விட்டார்கள் ..
பிணம் என்று …….!!!