தியானப் பாடல் - ஒரு பொழுதும் உனை மறவா - சி எம் ஜேசு

ஒரு பொழுதும் உனை மறவா
வாழ்வை தந்திடு என் இறைவா
உயிர் முழுதும் பிரியும் வரை - உம்
நினைப்பைத் தந்திடு எம் தலைவா

உலகுக்காய் வாழ்கிறேன்
உமக்காய் வாழச் செய்வீர் - உம்
நினைவுகள் கலைகின்ற - பொய்
நெஞ்சத்தை தஞ்சம் கொண்டேன்

* * * * * * * * * * * * * * * * * * * * * ( ஒரு பொழுதும் ...

அழிவைத் தேடுவது ஆனந்தம் என்றேன்
அன்பை இழப்பது போகட்டும் என்றேன்
குழந்தை மனங்கள் சிரிப்பதும் மறந்தேன்
இழந்தேன் எல்லாம் என்று தெரிந்தேன் இன்று

இயேசுவே உமை நோக்கிப் பார்க்கிறேன்
இனி ஒன்றும் வேண்டாம் என்று கேட்கிறேன்

உடல் பொருள் ஆவி எல்லாம் உமக்குத் தரும் வரம் தா

* * * * * * * * * * * * * * * * * * * * * * * ( ஒரு பொழுதும் ..

வாழ்வை நேசிப்பது இறைவன் இல்லை என்றேன்
வீழ்வை நினைப்பது வாழ்க்கை இல்லை என்றேன்
மலராய் மனம் தந்து வீழ்வதென்றுனர்ந்தேன்
நிழலாய் பிறருக்கு உதவும் குணம் கொண்டேன்

இயேசுவே நீர் என் வாழ்விலே
இயேசுவே நீர் என் உயிரிலே

கலந்து மகிழ்ந்து வாழும் இறை இன்பம் எனக்குத் தா

* * * * * * * * * * * * * * * * * * * * * * * ( ஒரு பொழுதும் ..

எழுதியவர் : சி .எம் .ஜேசு (29-May-14, 6:42 pm)
பார்வை : 151

மேலே