சூசையப்பர் பாடல் - தேவ பிதா குமாரனுக்கே -சி எம் ஜேசு

தேவ பிதா குமாரனுக்கே
தந்தை ஆனவரே -உம்
அன்பை நினைந்து தயவை நினைந்து
மனம் மகிழ்கின்றோமே

வாழ்க ! வாழ்க ! எங்கள் சூசையப்பரே
வாழ்க ! வாழ்க ! எங்கள் சூசையப்பரே
* * * * * * * * * * * * * * * * * * ( தேவ பிதா ..

வானத்தில் உயர்ந்தாய்
ஞானத்தில் நிறைந்தாய்
வல்லமை என்றும் கொண்டு
வாழ்வில் வளம் படைத்தாய்

அன்னைக் கன்னி மரி காவலனே நீ வாழ்க - எந்தன்
வாழ்வில் துணையாக வரும் தந்தை வாழ்க
* * * * * * * * * * * * * * * * * * ( தேவ பிதா ..

வேதங்கள் கற்பித்தாய்
கீதங்கள் இசைத்தாய்
நாதத்தால் நன்மை செய்யும்
நாதனையே வளர்த்தாய்

இறை மாபரனின் காவலனே நீ வாழ்க
நிறை நெஞ்சங்களில் தந்தையே உம் அன்பு வாழ்க
* * * * * * * * * * * * * * * * * * ( தேவ பிதா ..

எழுதியவர் : சி.எம்.ஜேசு (29-May-14, 7:18 pm)
பார்வை : 139

புதிய படைப்புகள்

மேலே