அன்பின் மொழி

துக்கத்தில் வழியும்
கண்ணீர்த்துளியே ..

தூக்கத்தில் விளையும்
கனவின் மொழியே...

என் அன்பின் வரிகளை
மொழிபெயர்த்தாய்
இதயம் பேசும் கவிதையாக ...

வாழ்வின் நூலகத்தில்
எனை இணைத்தாய்
அன்பின் பதிப்பாக...

பூங்காற்றாய் வந்தென்
இதயம் தொடுவாய்
சுவாசமாக...

வண்ணபூக்களாய் மலர்ந்தென்
இதழ்களில் நிறைவாய்
புன்னகையாக...

கடந்து வந்த பாதைகளை
திரும்பி பார்த்தால்
தீராத வியப்புகள்
விழிகளில் மலரும் இன்றும்
நான் வாழ்ந்த
நொடிகள் ஒவ்வொன்றிலும்
உன் நினைவின் துளிகள்
நிறைந்திருப்பதால் ....

வாழும் நாட்கள் சுகமாகிறது !
உன்னோடு வாழ்ந்த நாட்கலென்
நெஞ்சில் பூப்பதால்...

பாதை மாறவில்லை
பயணமும் முடியவில்லை
விதியின் வரவால்
விளைந்தது பிரிவின் வழி ..

பிரிவின் வலி கூட
நெஞ்சம் பேசும்
சுகமான அன்பின் மொழி....

எழுதியவர் : confidentkk (30-May-14, 4:07 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : anbin mozhi
பார்வை : 324

மேலே