துனிவே துணை
இளைஞன் ஒருவன் சாலையோர மரங்களை ரசித்தபடியே சென்றுகொண்டிருந்தான் .ஒரு மரத்தில் இருந்த பழங்கள் மீது ஆசைகொள்கிறான் .மரம் ஏறத்தெரியாத போதும் பழத்தின் மீதான ஆர்வத்தால் ஏறிப்பறித்துவிட துனிகிறான் .பழத்தின் மீது கவனம் செலுத்தி மரத்தின் மீது ஏறி பழங்களையும் உண்டுமகிழ்ந்தான் . மரத்திலிருந்து இறங்க நினைத்து கீழே பார்தவன் பயந்துவிடுகிறான் . தடுமாறிக் கீழேவிழுந்தவன் ஒரு மரக்கிளையை பிடித்துக்கொண்டு 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று கத்த ஆரம்பித்தான் .அந்த வழியாக வந்த முதியவர் அந்த இளைஞரிடம் நடந்தவற்றை கேட்டறிகிறார் .இளைஞனும் நடந்தவற்றைக்கூறி உதவ வேண்டுகிறான் .உடனே முதியவர் கற்களை எடுத்து அவன்மீது எறிய தொடங்கினார் முதியவர் .இதைச் சற்றும் எதிர் பாரத இளைஞன் 'ஏய் கிழவா காப்பாற்றச்சொன்னால் கல்லால் அடிக்கிறாயா'என்று கோபத்துடன் மரத்திலிருந்து இறங்கி முதியவரிடம் சென்று சன்டைபோட்டான் .முதியவர் நிதானமாகச் சொன்னார் 'தம்பி பழத்தை அடையும் லட்சியத்தால் மறைந்த உன் இயலாமை லட்சியத்தை அடைந்தவுடன் எட்டிபார்த்து .நான் கல்லால் உன்னை அடித்து என்னை அடிக்கும் லட்சியத்தை உன்னுள் ஏற்படுத்தியதால் எளிதாக இறங்கி விட்டாய்' என்றார்
கருத்து: சாதிக்கத் துனிந்தவனுக்கு தடைகற்கள் கூட படிகற்களே .