கொக்கு

என்றும் இல்லாத அளவுக்கு அன்று, வெயில் சற்று அதிகமாகவே வாட்டி யெடுத்தது.
மணி மூணு இருக்கும். எதிர் வெயில் கண்ணை பிளக்கத் தொடங்கியது, சரி வீட்டுக்கு கெளம்பலாம்னு பாத்தா, அன்னிக்குன்னு பாத்து எப்பவும் விக்கற ஒன்னு ரெண்டு புஸ்தகம் கூட விக்கல. வேலுக்கு என்ன பண்றத்துன்னு தெரில.,
சரி, பத்து நிமிஷம் பாக்கலாம், பத்து நிமிஷம் பாக்கலாம்ன்னு ஒரு மணி நேரம் ஆனது தான் மிச்சம்.
நாலு மணிக்கெல்லாம் வேலுக்கு கண் இருண்டது. தலை சுற்றி, மயங்கி கீழே விழுந்தான்.
வேலு மயங்கி விழுவதை பார்த்தவுடன், பக்கத்தில் இருந்த இளநீர் வியாபாரி குமாரசாமி, ஓடி வந்து அவனை தூக்கி அந்த மூணு சக்கர ச்சார்ல உக்காரவச்சி தள்ளிக்குனு போய் அந்த மரத்தடியில் ஓரமாய் அமர்த்தி தண்ணீர் தெளித்து அவனை தட்டி எழுப்பினான்.

அவன் எழுந்ததும், இளநீர் வெட்டி குடுத்தார், குமாரசாமி.
பின் ,ஒரு ஆட்டோவ புடிச்சி, வேலுவோட அந்த மூணு சக்கர ச்சார்ஹ மடிச்சி ஆட்டோல வச்சி வேலுவை ஆட்டோவில் ஏத்தி வீடு கொண்டு போய் சேர்த்து அவன் அம்மாகிட்ட நடந்தத சொல்லி கடைக்கு திரும்பினான் குமாரசாமி.

அசதியில் வந்து தூங்கிய வேலு எழும் வரை காத்திருந்த அவன் அம்மா. அவன் கண் விழித்ததும் அவனுக்காக சேர்த்து வைத்திருந்த திட்டல்களை அவனிடம் கொட்டினாள்.

சரி புது புதுசா புஸ்தகம் வச்சி இருந்தா பரவாயில்ல கவல படறத்துக்கு எதாவது நியாயம் இருக்கு, நீயே பழைய பேப்பர் கடையில இருக்கிற கத புஸ்தகம், பழைய நியூஸ் பேப்பர் எல்லாம் பாதி விலைக்கு வாங்கியாந்து, அந்த புஸ்தகத பைண்டிங் பண்ணி, அட்ட ஒட்டி விக்கிரவனுக்கு., எல்லா நாளும் வியாபாரம் நடக்குமா யென்ன?

ஒரு நாள் அப்டி இப்டி தான் இருக்கும், வெயில் தான் அதிகமா இருக்குல வீடு வந்து சேர வேண்டியது தான..!
வீடு என்னா பக்கதலயே வா இருக்கு? நெனச்ச வுடனே வரதுக்கு, அது இருக்குகுது அஞ்சு கிலோமீட்டருக்கு என்று சரவெடி போல் திட்டி தீர்த்தாள் அவன் அம்மா.

வாய் திறக்காமல் சொன்னதை எல்லாம் கேட்டுகொண்டு கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தான் வேலு. அப்பொழுது மணி ஆறு.

மறுநாள் அவன் தினமும் கிளம்பும் அதே உற்ச்சாகத்துடன் கிளம்பினான், இன்னிகாச்சு சீக்கரம் வந்துடு பா அன்று ஆசை வார்த்தைகள் பேசி அனுப்பினாள் வேலுவின் அம்மா சகுந்தலா.

சேரி மா, நேத்து வேற என்ன ஆச்சுனு தெரில? எல்லாம் போட்டது போட்ட படியே விட்டு வந்துட்டன் என்றான் வேலு.
அதலாம் ஒன்னும் கவல படாத அந்த இளநீர் கடைகாரர் ல, குமாரசாமி..
ஆமா..
அவர் எல்லாத்தையும் பாத்துகுரேன்னு சொன்னாரு, சரி சரி, பாத்து போ பா..! என்று மீண்டும் ஒருமுறை அவன் அம்மா சகுந்தலா வழியனுப்பினாள்.
மெல்ல அந்த மூன்று சக்கர வண்டியை, பெடலை கையில் சுற்றியபடி ஓட்டி சென்றான்.
ஆம், நீங்கள் நினைப்பது சரி தான்.
வேலு போலியோவால் பாதிக்கபட்டு அவனது ஒரு கால் செயல் இழந்தது . இருந்தாலும் அவன் தன் சுய காலில் நிற்கும் துணிச்சல் கொண்டவன். அதனாலே சுத்தி இருக்குறவங்க அவன் மேல நல்ல மரியாதை வச்சி இருக்காங்க.
இன்று அவன் புஸ்தகம் விற்பதற்கு போனதும் பார்த்து ஆச்சிரிய பட்ட குமாரசாமி, ஏன் பா இன்னும் ஒரு நாள் ஓய்வு எடுத்துட்டு வந்துருகலாமே என்று கேட்க, அவன் கண் சுற்றி அலைமோதியது.
என்ன வேலு பாக்கற?
என் புஸ்தகம் லாம் எங்க ணா?
அதுவா, அங்க பத்திரமா வச்சிருக்கன் பா, இரு எடுத்துட்டு வரன் யென்று குமாரசாமி அந்த புளிய மரத்துக்கு அடில பாலித்தீன் கவர்ல வேலு தெனமும் சுத்தி வைக்கற மாதிரி சுத்தி வச்சத பார்த்தவுடன் அவன் புன்முருவளிட்டான்.
ரொம்ப தாங்க்ஸ் ணா, யென்று சொல்லி பொய் அந்த பிளாட்பாரத்தில் புஸ்தகத்தை விரித்து வியாபாரத்திற்காக காத்திருந்தான் வேலு.
பழைய புஸ்தகம் தாங்க, ஆனா பாத்தா அப்டி தெரியாது. இல்லனா மூணு வருஷமா அதே தொழில், அதே இடத்துல செய்வானா?

பக்கத்துலே கலை கல்லூரி வேற.. இவன் வியாபாரத்தில் அந்த கல்லூரி ஒரு முக்கிய பங்கு வகிக்கறது தான் சொல்லணும்.
மணி நாலு ஆக போகுது, இன்னும் யாரும் வெளில வரலயேனு காலேஜ் கேட்டயே பாத்துட்டு இருந்தான் வேலு.
ஒரு ஒருதங்களா காலேஜ் ல இருந்து வர, வேலு முகம் துடைத்து க்ரிபாஹ் உட்கார்ந்தான்.
இருக்காத பின்ன, அதே வயசு தான வேலுக்கும்.
பொம்பள புல்லைகலாம் வேற வரும், அதளையும் குறிப்பா வேணி வேற வரும்,
அப்டி உட்காரதுல என்ன தப்பு??

ஆமாங்க அந்த காலேஜ் ல படிக்கிற வேணி மீது வேலுக்கு ஒரு தனிப் பிரியம்.
தினமும் எதிர்ல இருக்கும் அந்த பஸ் ஸ்டாப் ல தான் அவள பாப்பான், ஆனா இது வரைக்கும் வேணிகிட்ட, வேலு பேசனதே கிடையாது.

ரெண்டு வருஷமா அப்படி தான் பாத்துட்டு இருக்கான், மனசுக்குள்ள ஆச இருக்கு ஆனா அத சொல்ல தான் அவனுக்கு தயக்கம். அதுக்கு முக்கிய காரணம் அவன் மாற்று திறனாளி என்பது தான்.

அங்க வேற க்ளாஸ் விட்டதும் எல்லாரும் சினிமா தியேட்டர்ல இருந்து வர மாதிரி அடிச்சி புடிச்சி வெளில தள்ளி வர,
எல்லா நோட்டு புஸ்தகம் எடுத்து பையில வைக்கரதுங் காட்டியும் வேணியின் தோழி அமுதா வகுப்பிற்க்கு வெளியே சென்றாள்.
வேணி உடனே ஏ,
நில்லு டி,
நானும் வரன்..

வாயேன் டி இங்கதான இருக்கன்..! உன்ன, விட்டுட்டு என்னிக்காவது நான் போய் இருக்கேனா?
சரி சரி வா வா..
ஏ இந்த வாரம் குடும் நா அந்த புக்ஹ வாங்கவே இல்லடி..!
அதான், நேத்தோட எல்லா பிராக்டிகல்சும் முடிஞ்சிதே, நேத்து சாயங்காலம் வாங்க வேண்டியது தானே..
ஆமாம், நேத்து போய் வாங்கலன்னு போனாள் , கடக்காரன் இல்லன்னு சொல்லிட்டான்டி.!!
எனக்கு இப்ப இன்னா பண்றதுனே தெரில டி..!!
ரெண்டு வாரம் ஆச்சு "கொக்கு" கதைய படிச்சி..
இந்த வாரம் தான் "கொக்கு" கதைக்கு கிளைமாக்ஸ். அருமையான கத தெரியுமா? அகிலன் நா சும்மாவா??
என்று, அந்த கதையின் எழுத்தாளரை புகழ்ந்தவன்னம் வர,
எனக்கு எந்த கத படிகர்தலாம் அவ்ளோ பெரிய இன்ட்ரெஸ்ட் லாம் கிடையாது, யாரவது சொன்னா கேட்டுக்குவன் என்றாள் அமுதா.
அமுதாவின் பேச்சு, வேணியை கோபப் பட வைத்தது.
அது சரி, போன வாரம் எதோட டி கதைய முடிச்சாரு? என்று கேட்டாள் அமுதா.
மௌனம் காத்தாள் வேணி.
யேய் சொல்லு டி,

உனக்கு எத்தன தடவ சொல்றது, முடிவு வந்ததும் ஒரு தடவ முழுசா சொல்றன்.
இப்ப அந்த புஸ்தகத்த எங்க டீ போய் வாங்குவன்?
அந்த பாழா போன பிராக்டிகல் இந்த வாரம் தான் வரணுமா?
என்று வேணியின் தன்னுடைய புலம்பலை ஆரம்பித்தாள்.
அந்த புஸ்தகம் கிடைக்காதது வேணியவிட அமுதாக்கு தான் அதிர்ச்சி அதிகம் ஆச்சு
பின்ன என்ன?? பக்கத்துல அவ தான உக்காரா , புலம்பியே தீத்துற மாட்டா..????
என்று, அமுதா மனசுக்குள்ள நெனச்சிகிட்டே ரெண்டு பேரும் காலேஜ் ல இருந்து வெளில வந்து எதிர்ல இருக்குற பஸ் ஸ்டாண்ட் ல நின்னுட்டு இருக்க..
எதிர் ல இருக்கிற பிளாட்பாரத்தில் அடுக்கி வைத்திருந்த பழைய புத்தகம் கண்ணில் தென்பட, வேலுவ பார்த்தாள் வேணி.
யேய் அமுதா,
அங்க எதிர் ல கொஞ்சம் பாருடி..
அங்க என்னா?
அங்க அவரு பழைய புஸ்தகலாம் விக்கிறார்.. அவரு கிட்ட கேட்டு பாக்கலாம் டி,
எத அந்த கத புஸ்தகத்தையா?

வேணி, "ஆனந்தம்" புக்கு வந்து ஒரு வாரம் கூட முழுசா ஆகல.. அதுக்குள்ள எப்படி டி??

அவரே பழைய புஸ்தகம் விக்கறவர்..!! ரெண்டு வருஷமா நம்ப பாத்துட்டு தான இருக்கோம்.

சும்மா, இந்த ஒரு தடவ கேட்டு பாக்கலாம்டி..
சரி வா..
அண்ணே..
உடனே திடுக்கிட்டான் வேலு.
நானும் உங்க வயசு தான் அண்ணனு சொல்லாதிங்க..

வேலு 'ன்னு கூப்பிடுங்க..!
சரி வேலு, எனக்கு ஒரு புக் வேணும் கிடைக்குமா?
அது என்ன புக்கு?
"ஆனந்தம்"..
ஒரு புக்கு இருக்கு, ஒரு நிமிஷம்..
இதோ.. இருக்கே.. இந்தாங்க..
இல்ல வேலு.. இந்த வாரத்து புக்..
இல்லைங்க...

சரி போன வாரத்து புக்?
இல்லைங்க, கொஞ்ச நாள் ஆகும். இப்பதான வந்துது.
வேணி உடனே எத்தன நாள் ஆகும்?

சொல்ல முடியாதுங்க.. சில நேரம் சீக்கரம் வரும், சில நேரம் லேட் ஆகும்..

அடடா, சேரி வேலு கொஞ்சம் சீக்கரம் ட்ரை பண்றிங்களா?
எனக்கு அவசியம் கடைசி ரெண்டு வார "ஆனந்தம்" புக்கு வேணும்.

சரி நான் எப்பவும் வாங்கற ஒரு கடையில சொல்லி வைக்கரன்.
அந்த புக்ல மட்டும் அகிலன் அய்யா கத வரலானா அந்த புக் வாங்க நாதி கிடையாதுனு சொன்னதும்
வேணியின் முகம் பளிச்சிற்றது.

நீங்க அந்த "கொக்கு" கத படிப்பிங்களா ?

இன்னாங்க, இப்படி கேக்குறிங்க அந்த கதைக்காக காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்,
அவசியம் வாங்கி வைக்கிறேன் நாளைக்கு வாங்க என்றான் வேலு.

மறுநாள் அவன் எப்பவும் போற அந்த வேஸ்ட் பேப்பர் கடைக்கு சென்று,
புஸ்தகத்தை அலசியபடி இருந்தான்.

என்னப்பா கலைக்கர எப்பவும் இப்படி பன்னமாட்டியே என்னாச்சு???
இதுல, கடைசி ரெண்டு வார "ஆனந்தம்" காணோம் ணா.., இருக்கா?

என்னப்பா, வந்து பத்து நாள் குடும் ஆகல அதுக்குள்ள யெப்படி வரும்?
உனக்கு தெரியாதா என்ன?

ம்ம்ம்ம் சரி ணா, இதுக்கு மட்டும் யெவ்ளோ ஆச்சு ?
கையில எடுத்து வச்ச புக்க எடுத்து காமிச்சான்.

முப்பது ரூபாய்..

காசு குடுக்கும் போது, கடைக்காரனின் மேஜை மீது அந்த "ஆனந்தம்" புக்கு இருப்பதை பார்த்தான்.

அண்ணே இங்க இருக்கே.. எடுத்துக்கலாமா ?
ஏம் ப்பா அவசரம் இப்ப தான் என் கைலயே வந்துச்சு படிச்சிட்டு தரன் நாளைக்கு வாங்கிக்கறையா?

தயக்கத்துடன் நின்றான் வேலு.
என்ன வேலு என்ன ஆச்சு, யான் தயங்கற
இல்ல ணா, அவசியம் இந்த புக்க ஒரு கஸ்டமர் கேட்டாங்க.. அதான்...
சரி இந்தா எடுத்துட்டு போ..

ரொம்ப தேங்க்ஸ் ணா.,

அந்த புக்க வாங்கிட்டு, அவனது மூணு சக்கர சைக்கிள தள்ளிக்கினே ஒட்டி சென்ற அவனால்,
சிறிது நேரம் கூட காத்திருக்க முடியவில்லை. விறுவிறுப்பின் உச்சத்தை படிக்கும் சந்தோஷத்தில் வேலு.
அங்கு நிழல் சூழ்ந்த இடத்தில் சைக்கிளை நிறுத்தி,
அந்த பூக்ஹ எடுத்து படிக்கத் தொடங்கினான்.

நடுபக்கத்தை விரித்தான்.
எப்பவும் அவர் கத நடுபக்கத்துல தான் வரும், இன்னிக்கு கிளைமாக்ஸ் வேற சொல்லவா வேணும்.

சுற்றிலும் அமைதியான சூழல்.
கதையின் உச்சத்தை படிக்கும் இதை விட வேறு யெப்படி அமைய வேண்டும்.

மெல்ல அந்த "கொக்கு" கதையின் முடிவைப் படித்தான்.

வேலுக்கு நெற்றி வேர்த்தது. அதை துடைத்தபடி படித்தான்,
படிப்பதை மட்டும் நிறுத்தவில்லை வேலு..
திடீரென்று அவன் முகம் சற்று மாறத் தொடங்கியது..
கதையை முழுவதும் படித்த பின்,

கண்களை இருக்கி மூடி அழுதான், அவன் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல.

அப்படி என்ன முடிவு என்று தானே கேட்குரீர்கள்?

இதோ, இது தான் அந்த முடிவு.

கதையின் நாயகன் ஊனமுற்ற காலுடன், அவளிடம் காதலை சொல்ல இரண்டு வருடம் காத்திருக்க..
எப்படியாவது சொல்ல வேண்டும் என்று அன்று கிளம்பினான்.
அவளை கூப்பிட்டான்
நான் உங்கள ரெண்டு வருஷமா ஒன்னு கேக்கணும் நெனச்சங்க கேக்கலாமா?

என்னது சொல்லுங்க..
நா, உங்கள கல்யாணம் பண்ணிக்கலாமா?
அவள் முகம் சட்டேன்று மாறியது..
என்னங்க ஒன்னுமே பேச மாட்டிகிரிங்க..
என்னங்க பேசறத்து.,

என் காதல ஏத்துக்கோங்க..!

சில வினாடிகள் யோசித்தப் பின்,

அவள், கொஞ்சம் பிராக்டிகலா யோசிங்க.. இந்த காலத்துல நல்லா இருக்குரவங்கலாலயே வாழ்கையில வெளிச்சத்துக்கு வரமுடியல..

நீங்க வேறே இப்படி..
நா உங்கள குத்தம் சொல்லங்க..
நம்பளால் வாழ்கையில் நல்லா வெகுதூரம் பயணிக்க முடியாதுங்க..
அவளின் பேச்சில் நம்பிக்கை இல்லை, தன்னம்பிக்கையும் தான்.

அவனின் நிலைமையை பார்த்து, நா வேணும்னா, எங்க அப்பா கிட்ட சொல்லி உங்களுக்கு பணம் வாங்கி தரங்க..

அத வச்சி பெரிய கட வச்சி பொழச்சிகொங்க, என்று சொல்லி திரும்பி பார்த்தவுடன் தெரிந்தது அவன் தனது வண்டியை தள்ளிக்குனு போறத்த..

அவள் அவனை கூப்பிட, நிற்காமல் போனது அவனது வண்டி.
நில்லுங்க ஒரு நிமிஷம்..
அவன் நிற்கவில்லை..!
நில்லுங்க ப்ளீஸ்..
சட்டென்று நின்ன அவன்.
என்ன நீங்க தப்பா நினைக்கல ல என்று கேக்க..

நா யாருங்க உங்கள தப்பா நினைகர்துக்கு? நீங்க உங்களோட முடிவ சொல்லிடிங்க..
அது போதும். எனக்கு, சந்தோசம் தான். ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சிகோங்க..!
நான் தான் ஊனமே தவிர, என் காதல் ஊனம் கிடையாது.
இந்த எதிர்பாராத முடிவை படித்ததும், இந்த புஸ்தகத்தை வேணிக்கு தர வேலுக்கு கொஞ்சம் குடும் விருப்பம் இல்லை.

யோசிச்சிக்கிட்டே வண்டியை மெல்ல வோட்டி கொண்டு கல்லூரியின் வாசலில் இடது புறமாய் இருந்த பிளாட்பாரத்தில் அந்த பழைய புத்தகத்தோடு வாங்கி வந்த புத்தகத்தையும் அடுக்கி வைத்தான்.
அந்த "ஆனந்தம் " புக்க மட்டும் அவன் வைக்கவில்லை.
கல்லூரி முடிந்ததும் வேணி, அமுதாவை விட்டு விரைந்து வந்து,
வேலு..
புத்தகம் என்ன ஆச்சு? என்று கேட்க..

அந்த புக் வர என்னும் மூணு நாலு நாள் ஆகுமாம்.

முகம் மாறியது வேணிக்கு.
ஆனா, அந்த கத முடிவ ஒருவர் எனக்கு சொன்னார்.
வேணிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை..

இப்போதிக்கு, அவளுக்கு அந்த கத முடிவு தெரிஞ்சா போதும்..

இரண்டு வருடமாக சொல்லத் தயங்கிய வேலுவின் காதலை அவன் வாயாலயே அவளிடம் தைரியமாக சொன்னான் கதையாக..,

ஆம், அந்த "கொக்கு" கதையின் முடிவாக..

அந்த, கதையை வேலுவிடம் கேட்ட மகிழ்ச்சியில் பேருந்து நிழற் கூடைக்கு சென்றாள்.

அங்கு, அவளின் தோழி அமுதா மிகுந்த கோபத்துடன் உட்கார்ந்திருந்தாள்.

என்ன அமுதா, என்ன ஆச்சு?
பேசாத நீ... நா என்னிக்காவது உன்ன விட்டு வந்திருகன்னா ?

சாரி டி, அந்த கத புக்கு வாங்கற உற்சாகத்துல, உன்ன விட்டுடே வந்துடன் டி,

அமைதி காத்தாள் அமுதா.

ஒரு வழியா அமுதாவ சமாதானப் படுத்தினாள் வேணி...

யேய், நா சொல்லல அந்த கத முடிவு இப்படி தான் இருக்கும்னு..

பாத்தியா..
இப்பயாச்சு முழுசா சொல்லு என்று அமுதா கேட்க,
சலிக்காமல்.. வேணி, சரி சுருக்கமா சொல்றன் நல்லா கேளு..

கதையின் நாயகன், தனது ஊனமுற்ற கால்களுடன், இருந்தாலும் சுயம்பு வாக வாழ விரும்புவன், யாரிடமும் கையேந்தி பிழைக்கும் பிழைப்பு விரும்பாதவன். அவன் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தான். ஆனால் அவனுக்கு அதைச் சொல்ல கூச்சம்.

நல்லா இருக்குரவனையே இந்த ஊர்ல மதிக்க மாடிக்கிறாங்க, அவன் வேற ஒரு காலை இழந்தவன்.
அவன் யெப்படி?அந்த பெண்ணிடம் காதலை சொல்லுவான்.
ஆனால் அந்த இரண்டு வருஷத்துல தினமும் அந்த பெண்ணை ஒரு முறையாவது பார்த்து விடுவான். இது பக்கத்தில் இருக்கும் ஒரு கடைக்காருக்கு மட்டும் தெரிய வந்தது.

ஒரு நாள், அந்த கடைகாரர், யாம் பா, இன்னும் யெவ்ளோ நாளைக்கு தூரத்துல இருந்து அவளையே பார்த்துட்டு இருப்ப ?

நீ அந்த பொண்ணுகிட்ட போய் தைரியமா சொல்லுப்பா?

சொன்னாதான அவளுக்கும் தெரியும், இல்லனா உன் மனசுல இருக்கறது அவளுக்கு யெப்படி அவளுக்கு தெரியும்?

போய் சொல்லு?
நீ எதுக்கு தயங்கரன்னு தெரியும்?
என்று தைரியம் சொன்ன அந்த கடைகாரருக்கு நன்றி தெரிவித்து,

என்ன ஆனாலும் சேரினு அன்று மாலை அவளிடம் காதலை சொல்ல அந்த மூணு சக்கர சைக்கிளின் பெடலை சுத்தியபடி போனான்.

அவளை அழைத்தான். ஏங்க? ஒரு நிமிஷம்...
சரி உதவி ஏதேனும் கேட்பாரோ என்று இவள் திரும்பி பார்த்தாள்.

எனக்கு மயக்கமா இருக்கு, அந்த தெரு முனை வரைக்கும் என்ன கொண்டு பொய் சேர்குரிங்களா என்றான்..

ஹ்ம்ம், சரிங்க என்று, அனுதாபத்தில் அவள் அந்த மூணு சக்கர சைக்கிள்ல தள்ளிகுனு போகும் போது அவளிடம் மெல்ல பேச்சு கொடுத்தான்.

ஏங்க.. உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா?
என்னது சொல்லுங்க..

என்ன கல்யாணம் பண்ணிகுரிங்களா?

என்னங்க, திடிர்னு இப்படி கேக்குரிங்க...?

திடிர்னு லாம் இல்லைங்க, ரெண்டு வருஷமா உங்க கிட்ட சொல்ல மூஞ்சில்லாமதான் சொல்லாம இருந்தேன்.

இன்னிக்கு ஒரு முடியோட தான் வந்தேன்..
உங்களுக்கு லாம் ஒரு கொறையும் இல்ல..

ஆயிரம் "வரன்" வரும்.

எனக்கு நீங்க தாங்க "வரம்"
எளிதில் கிடைக்காத "வரம்".
என்றவுடன் அவளது மனம் சட்டென்று இளகியது.

அந்த தெரு முனை வந்ததும் அவள் நின்றாள்.

என்னங்க அவளோதானா?

என் முடிவ நாளைக்கு சொல்லட்டுமா?

இந்த நிமிஷம் உங்களுக்கு என்ன பார்க்கும் போது என்ன தோனுதோ, அதையே முடிவா சொல்லுங்க..!

காத்திருந்தது போதும்..
யோசித்த அவள்,
நா உங்க வீடு வரைக்கும் உங்கள விடவா?

என்று அந்த மூணு சக்கர வண்டிய, தள்ளிகுனு போனாள் அவள்.

யெப்படி டி கிளைமாக்ஸ் ??
என்று, இருவரும் பேருந்துக்காக காத்திருக்க..

வேணி, என்ன டி? அங்க பாரு பஸ் வர மாதிரி தெரியுது..
எங்க..? ஆமா..!!
சரி நா கெலம்பரன் டி.. பாய் டி.. என்று வேணி வீட்டுக்கு சென்றாள்.
வாசலில் வேணியின் அப்பா,
ஏம் மா இவ்ளோ லேட்டு ? பஸ் ரொம்ப நேரம் ஆகியும் வரல ப்பா??
சரி சரி, அப்பா உனக்கு ஒன்னு வாங்கி வச்சிருக்கன்..
என்ன ப்பா???
கண்டுபிடி பாக்கலாம்..
ஹ்ம்ம் தெரிலயே ..

இந்தா நீ கேட்ட, லாஸ்ட் ரெண்டு வார ஆனந்தம் புக்கு...
யெப்புடி ப்பா கிடச்சிது என்று ஆச்சிரியத்துடன் கேட்டாள் வேணி.!!

அதுவா, ஒரு கடைல சொல்லி வச்சிருந்தேன் ம்மா ?
இன்னிக்கு தான் கொடுத்தான்.. போய் படி,

ரொம்ப தேங்க்ஸ் ப்பா..
உள்ளே போய் புத்தக பையை, இறக்கி வைத்து,
மாடிக்கு சென்றாள் அந்த கத புஸ்தகத்தோடு...

என்னதான் வேலு கிட்ட கதைய கேட்டாலும், நம்மளே படிக்கிற சந்தோசம், துக்கம், ஒரு உணர்வு, ஒரு த்ரில் வருமா ?

என்று நினைத்தவாறு, கடந்த இரு வார புத்தகத்தை படிக்க,
வேணியின், முகம் மாறியது, கண்கள் சிவத்தது.

ஏன் வேலு, என் கிட்ட இந்த கதைய மாத்தி சொன்னான்..
என்று, மறுபடியும் ஒரு முறை அந்த இரண்டு வார கதையை படித்து முடிக்க,
அவளுக்கு, சுருக்கென்று தோன்றியது.
வேலு ஒரு மாற்று திறனாளி, இந்த கதையின் நாயகனும் ஒரு மாற்று திறனாளி.

இந்த கதையின் நாயகி ஒரு கல்லூரி பெண்,

அப்ப நானு ???????.
வாயடைத்தாள் வேணி.
மறுநாள் அவனை பார்க்கும் ஆர்வத்தில் வேணி கல்லூரிக்கு போக..
அங்கு வேலு இல்லை.
பக்கதுல இருக்கும், குமாரசாமியிடம் கேட்டாள்..
அண்ண.. என்ன மா.. வேலு இல்லையா ?
ஆமா நீ யாரு, அவன ஏன் நீ கேக்குற.. என்றார்.

என் பேரு வேணி ணா, நா வேலுவ அவசியம் பாக்கணும்..
ஓ நீ தான் வேணியா?
ஆமா ணா, இன்னா ஆச்சு..

என்னிக்காவது ஒரு நாள்.. நீ வந்து அவன கேட்பன்னு சொன்னான் மா..
அப்படி வந்து கேக்கும் போது, ஒரு புக்க கொடுக்க சொன்னான்..

குமாரசாமி அந்த "ஆனந்தம்" புக்க யெடுத்து கொடுக்க..
சிவத்த கண், மீண்டும் சிவத்தது வேணிக்கு.

வேற எதாவது சொன்னாரா?
வேற எதுவும் சொல்லல, இந்த புக்கு உனக்கு தான் சொந்தம்னு சொன்னான்..


________________________________
எண்ணம் & ஆக்கம்
- ரேணுமோகன்

எழுதியவர் : ரேணுமோகன் (31-May-14, 12:37 pm)
Tanglish : kokku
பார்வை : 374

மேலே