அந்நியச்செலவானி 5ரூபாய்
![](https://eluthu.com/images/loading.gif)
சந்தனாவிற்கு கோடைவிடுமுறை கிராமத்திலுள்ள தன் பாட்டி வீட்டிற்க்கு வந்திருக்கிறாள் பாட்டியின் பனிகாரக்கடையில் உதவியாயிருக்கிறாள் உதவியால் மகிழ்ந்தபாட்டி பத்துரூபாய் கொடுத்து எதாவது வாங்கித்தின்ன சொல்கிறாள் .காலையில் விளம்பரத்தில் கண்ட சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி ஆசையாய் பிரித்தாள் .காற்று நிரம்பியபையில் இருந்த நான்குதுண்டு சிப்சைக்கண்டு ஏமாற்றமடைகிறாள் .மீதி 5ரூபாயை ஏழைச்சிறுவனுக்கு கொடுத்துவிட்டு பாட்டி கடைக்குச் செல்கிறாள் .சிறிது நேரம்கழித்து அந்த ஏழைச்சிறுவன் பாட்டியிடம் வந்து தான் கொடுத்த 5ரூபாயை பாட்டியிடம் கொடுத்து வயிறுநிறைய உண்பதைக் காண்கிறாள் .சிப்ஸ் வாங்கிய 5ரூ எனக்கும் உதவாமல் எனைசேர்ந்தார்க்கும் உதவாமல் எங்கே போனது ? அதே சமயம் ஏழைச்சிறுவனுக்கு கொடுத்த 5ரூ தன் பாட்டியிடமே திரும்பி வந்துவிட்டதே ஏன் இந்த நிலை என்று நினைக்கையிலே தன் அண்ணன் படித்த அந்நியச்செலவானி பாடம் ஞபகத்திற்க்கு வருகிறது .நம்மில் பலர் செய்யும் செலவுகளும் தங்களுக்கும் பயன் படாத அதேநேரம் தன்னைச்சார்ந்தவருக்கும் பயன் படாதவகையில் செய்யப்படும் தண்டச்செலவே! .இந்தியனாய் இருப்போம்! அந்நியம் அழிப்போம்!