விதியின் விளையாட்டு31

ஜோசியரும் ஷிவானியின் தந்தையும் விரைந்து சென்று ஷிவானியை பார்த்தனர்....

அங்கிருந்த அனைவரும் கதறி அழ ஜோசியரும் கண் கலங்கினார்.

இறுதி நிலை என்று மருத்துவர் கை விரித்து விட்டார் என்று தாய் சொன்னதும் என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசியர்...!

தான் எதிர் பார்த்த முடிவும் இதுதானே என்பதை மனதில் யூகித்துக்கொண்டார் ஜோசியர்?????

அப்பொழுது மெல்ல கண் திறந்து பார்த்த ஷிவானி அங்கிருந்த அனைவரின் முகத்தையும் ஒரு ஏக்க பார்வை பார்த்து விட்டு ஜோசியர் பக்கம் தன் பார்வையை செலுத்தி கண் சைகையின் மூலம் அவரை தன் பக்கம் அழைத்தாள்....!

மற்றவர்களை வெளியில் அமர சொல்லிவிட்டு ஜோசியர் மட்டும் ஷிவானியின் பக்கத்தில் சென்று அமர்ந்தார்...!

ரிஷானி நின்று கவனித்துக்கொண்டிருந்தாள்.......

ஜோசியரும் ஷிவானியும் எதை பற்றியோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தது புரிந்தது பேசிக்கொண்டிருக்கும் போதே இருவரும் அழுது கொண்டிருப்பதும் புரிந்து போனது ரிஷானிக்கு ஆனால் என்ன விஷயம் என்றுதான் புரியவில்லை....!

உடனே ஜோசியர் வெளியில் வந்து மருத்துவரை அழைத்து சென்றார் அவர் ஒரு பேப்பரில் என்னவோ எழுதி ஷிவானியிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டார்....

சுமார் 15நிமிட பேச்சுக்கு பிறகு ஜோசியர் மற்றும் மருத்துவர் இருவரும் வெளியே வந்தனர் ஆனால் இருவரின் முகத்திலும் ஏதோ ஒரு விஷயம் மறைந்திருப்பதும் உள்ளே ஏதோ உடன்படிக்கை நடந்து கொண்டிருந்ததும் ஒரே குழப்பமாக இருந்தது ரிஷானிக்கு....???..

ஷிவானி நம்மள விட்டு போயிட்டா என்று சொல்லி கண் கலங்கினார் ஜோசியர்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை........

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்து விட்டதே என்று சொல்லி சொல்லி அழுதான் மனோஜ்.........என்னையும் அவளிடம் அனுப்பி விடுங்கள் அவள் இல்லாமல் நான் இல்லை என்று புலம்பிக்கொண்டிருந்தான்...!

அவனை தேற்றி விட்டு ஆக வேண்டியதை பார்ப்போம் என்ற ஜோசியர் மருத்துவரை பார்த்து அந்த பேப்பரை காட்ட சொன்னார்...அவர் கொடுத்த பேப்பரை வாங்கி படித்த ஷிவானியின் தந்தை அடப்பாவி என்ன காரியம் பண்ணிட்ட என்று சொல்லி வேண்டாம் டாக்டர் அவ சொன்னது இருக்கட்டும் தயவு செய்து அவ சொன்னத கேட்காதீங்க பெற்ற மனதும் புகுந்த வீட்டுக்கும் எந்த மன வருத்தம் இல்லாமல் இருக்கணும்னு நான் நினைக்கிறேன் தயவு செய்து அந்த பேப்பரை கிழித்து போட்டிருங்க என்று கெஞ்சினார்............!


முடியாது அவளாவே எடுத்த முடிவு இது ஒரு நல்ல மருத்துவரா பணியாற்றி கொண்டிருக்கும் என்னால் அந்த பொண்ணுக்கு விரோதமான முடிவுகள் எடுக்க முடியாது வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டு தன் கடமையை செய்ய கிளம்பினார்....!


நீங்களும் குடும்பம் உள்ளவர் தானே கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க சார் ப்ளிஸ் சார் என்று டாக்டரின் காலை பிடித்து அழுதார் ஷிவானியின் தந்தை.........

என்ன விஷயம் என்று புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து குழம்பிக்கொண்டிருந்தனர் அவரின் இரு குடும்பங்களும்???????

அப்பொழுது பொறுமையின்றி ரிஷானி என்னப்பா என்ன ஆச்சி ஏன் இப்படி என்னெல்லாமோ பேசுகிறீர்கள் என்ன என்று கேட்டவள் அந்த பேப்பரை வாங்கி படித்தாள்............!



விதி தொடரும்.......

எழுதியவர் : ப்ரியா (31-May-14, 10:18 am)
பார்வை : 203

மேலே