யாரடி நீ

சிதறிய மழைத்துளிகளில்
நான் பார்த்த
வானவில் நீ.............

பிரம்மனின் கைவண்ணச்
சிற்பமே
நான் பிரம்மிக்க கைவீசி
வந்ததோ...........?

குடைப்பிடிக்க மறந்தவளே
விழித்திரையில் பதிந்தவளே
யாரடி நீ............?

நுண்நோக்கி தோற்றதடி
உன் முதல் பார்வையிலேயே
என் கால்கள் உந்தன்
பின் நோக்கி நகருதடி.........

யாரடி நீ..........?
பூபந்தை ரசிக்க
வந்த வான்மகளா.........?
இல்லை

இருக்கவிதைகளின் சங்கமத்தில்
பிறந்த கவிமகளா.........?

உன் சிரிப்பொலிகள் எல்லாம்
கவிகளாய் கேட்குதடி..........

சிரிப்பறிந்த சிற்பமே
யாரடி நீ...........?

பெண் இலக்கணத்தில்
பிழையின்றி பிறந்தவளா.........?
இல்லை உன்னை
பார்த்துத்தான் இலக்கணங்கள்
பிறந்தனவா..............?

ஐயோ அப்படி
பார்க்காதே கொட்டும் மழையிலும்
வெப்பம் தாக்குகிறது

ஓ.........
ஓர்வேளை மின்னல் மகளாய்
இருப்பாயோ..........?

தயவு செய்து நனையாதே
இந்த மழைத்துளிகளில் ...............
எனைப்பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது
உன் உதட்டின் மேல் அமர்ந்து கொண்டு. ...........

உருவி கொண்டு போகாதே
ஏற்கனவே
உருகிக்கொண்டு தான்
இருக்கிறது என் ஒற்றை உயிர்................

என் சப்தநாடியும் கிளர்ந்தெழும்
அதிசயத்தை சத்தமின்றி செய்கிறதடி
உன் பார்வைகள்...............

போகும் முன் சொல்லிவிடு
நீ எந்தலோகத்தை
சேர்ந்தவள் என்று...................

எழுதியவர் : கவியரசன் (1-Jun-14, 6:47 pm)
Tanglish : yaradi nee
பார்வை : 162

மேலே