மானுட முயற்சி
தீயின்றி புகையோ
தோன்றினில் அர்த்தம்,
விதியின்றி ஏனோ
நாம் வாழ்ந்திட...
நரம்பிற்கும் தசையிற்கும்
ஓடும் உதிரமாய்.!
ஓயாது ஒளிதரும்
கர்ம கதிரவனாய்.!
தேடிய பொழுது கிட்டும் வரை
போகாத தூரம் பயணித்தும்...
பலனுண்டு.!
பயமுண்டு.!
தோற்ற பின் தெளிவுண்டு.!
வாகை சூட வெறியுண்டு.!
மந்திர மதி கொண்டு
முரண்பட மனமுண்டு.!
அதில் யாரும் அறியா
கல்லடி ஈரமுண்டு.!