பேட்டி

மனிதர் பற்றி

ஒற்றை உடல் அதனுள்
தொற்றிய உயிர்
அதற்கு ஒரு பெயர்
மற்றவை என்னவோ கிடைக்கும்
வாழும்வரை சொன்னது மட்டும் நிலைக்கும் ............

வாழ்வு என்பது

பாய்மரம் காற்றடிக்க
திசை மாறும்
இறுதியில் ஓர் திசை சேரும்
செலுத்துபவன் மதி அதிகமானால்
செல்லும் வழி தெளிவாகும்

மனம் பற்றி

அட சீ என சொல்லி விட்டுவிடு
அது தானாய் அடங்கி அமர்ந்து விடும்
அதை தோண்டி துருவி நீ பார்த்தால்
உன்னை பாடாய் படுத்தி அமுக்கி விடும்

உறவுகள் பற்றி

தாமரை இலை நீர்போலே
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
இல்லையேல்
அவை பட்டென உடைகையில்
நீ சட்டென உடைந்திடுவாய்............

கடவுள் பற்றி

சிலருக்குதான் கடவுள்
சிலருக்கு தான் கடவுள்
என்னை பொருத்தவரை கட+உள் .........

பணம் பற்றி

குணம் அற்றவனிடம் அதிகம் சேரும்
மனம் பெற்றவனின் காலினை வாரும்
இல்லாத போது எண்ணத்தில் இருக்கும்
இருக்கும் போது எண்ணத்தை கெடுக்கும்

சமூகம் பற்றி

நீயும் நானும் அது
தீயை போன்றது அது
தீட்டியக் கண்ணை வைத்துக்கொண்டு
குற்றம் மட்டும் கண்டுக்கொண்டு
சுகமாய் வாழ்வது அது..................

காதல் பற்றி

சுனாமிக்குள்ளே சுகத்தை கண்டு
வாழும் வாழ்க்கை காதல்
எப்போது எழுமோ எப்படி எழுமோ..........?
எப்பபார்த்தாலும் மோதல்

ஞானி என்பவர்

நான் நீ காணாத
ஒன்றை கண்டவன் என்பான்
நான் நீ
கண்ட ஒன்றை காணாதவன் என்பான்

இன்றைய மதம்

நேற்று வரை புனிதம்
இன்று பற்றி சொன்னால்
நான் பிழைப்பது ரொம்ப கடினம்..........

எழுதியவர் : கவியரசன் (4-Jun-14, 12:37 am)
பார்வை : 194

மேலே