ஊக்கம்
விழுவது எழுவதெற்கே
எழுச்சியோடு முயல்வதற்கே
விழுதுகளே விருட்சமாகும்
உலகத்துக்கே வெளிச்சமாகும்
சோதனைகளும் வாய்ப்புகளாகும்
சாதனைகளின் வார்ப்புகளாகும்
வேதனைகளின் எல்லைதாண்டி
விருதுகளை மாலையாக்கும்
பள்ளத்தைத் தாண்டிவரும்
வெள்ளம்தான் வேகங்கொள்ளும்
உள்ளத்தில் உறுதிகொள்ளும்
ஊக்கத்திற்கே உயர்விருக்கும்