குரல் கொடு எனக்கொரு உயிர் கொடு-----அஹமது அலி-----
ஊஞ்சல் போடும் உல்லாசமே
ஊமை வேசம் போட்டது போதும்
உன் குரல் கேட்க மனவாசல்
செவிமடல் திறந்து காத்துக் கிடக்கிறது
குரல் கொடு! அதில் எனக்கொரு உயிர் கொடு!!
(0)
புவியோடு மிதந்து
புல்லோடும் பூவோடும்
கானம் பாடும் தென்றல் காற்றின்
மன்றத்தில் பிறந்த குணக்குன்றமே
குரல் கொடு! அதில் எனக்கொரு உயிர் கொடு!!
(0)
கால்கள் முளைக்காமல்
காற்றில் நடை போடும்
வெண்மேகத்தின்
பொன் மேனியில் பஞ்சு பதித்தவளே
பிஞ்சுக்கரங்களால் நெஞ்சை வருடி
நேசம் திருடியவளே
நேற்று இன்று மறந்து
நாளைக்காக நமக்காக
குரல் கொடு! அதில் எனக்கொரு உயிர் கொடு!!
(0)
கதை பேசுகிறாய்
கற்பனையாகவும் பேசுகிறாய்
காவியம் பேசுகிறாய்
ஊரை பேசுகிறாய்
உலகம் பேசுகிறாய்
உன்னை பேசுகிறாய்
என்னை பேசுகிறாய்
ஏனடி நம்மை பேச மறுக்கிறாய்..?
(0)
மனவாசல் செவிமடல் திறந்து
காத்துக் கிடக்கிறது
குரல் கொடு! அதில் எனக்கொரு உயிர் கொடு!!