மதுரமான மதுரை

பசுமை பச்சை மாமலை சூழ்ந்தது கண்ணுக்கு மதுரம்
தெம்மாங்கும் சங்க செந்தமிழும் செவிக்கு மதுரம்
தென் பொதிகை குளிர் தென்றல் மேய்க்கு மதுரம்
மழைத் தேன் கலந்த வைகை நீர் நாவிற்கு மதுரம்
சுந்தரேசன் கால் மாற்றிய நடனம் சித்தத்திற்கு மதுரம்
பொறி ஐந்தும் இன்புற்றிடும் மதுராபுரி உறையும்
மீனாட்சி உடனுறை மதுராதிபதே மதுரம் மதுரம்

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (5-Jun-14, 5:08 pm)
பார்வை : 124

மேலே