இனப்படுகொலையாளன் வரவும் ஈனப்பிறவிகளின் பாஜக உறவும்

கோமாளி நாடகத்தில்
வியாபாரி தந்திரங்கள்
விளைச்சல் காணக் கிடைக்கும்
மந்திரிகள்

ஈழம் என்னும் சொல்
இவை அனைத்திற்கும்
மூலதனச் செல்வங்கள்

மூலையற்ற தமிழனுக்கோ
வானை வில்லாய்
வளைக்கும் தலைவர்கள்

வீழ்த்தும் வில்லை
வாழ்த்தும்
வஞ்சகர்கள்

ஊடக திரைகளிலோ
கேடர்கள் ஊடறுப்பேன்
என்னும் மந்திரங்கள்

கூடி உறவாட
கோடி தமிழர்
பகை சாட

கோசங்கள் ஆங்காங்கே
கறுப்புக் கொடிப் பிடிக்கும்
வேஷங்கள் அழகாவே

படுகொலையாளன் வரவுக்கு
பவ்வியமாய் பந்தி விரிக்கும்
பச்சோந்திகள்

எச்சிச் சோற்றிற்க்காய்
இனத்தை அடகுவைக்கும்
இழிப் பிறப்புக்கள்

இல்லாது போக
நல்வாய்ப்பு தார வாருங்கள்
பகை முடிக்க
தமிழராய் !
ஒன்றுகூடுங்கள் !
ஒன்றுகூடுங்கள் !

.........................எழுதியவர் பா.தமிழ்முகிலன்

எழுதியவர் : பா.தமிழ்முகிலன் (5-Jun-14, 8:17 am)
பார்வை : 112

மேலே