உயிரின் தேடல்
நீ
மெது மெதுவாய்
என் காதோரம் வந்து
கதை பேச வேண்டும் ..
அது அதுவாக
என் தேகம்
இளைப்பாற வேண்டும் ..
எது எதுவோ
எனக்குள்
நடந்தாக வேண்டும் ..
இது இதுதான்
எனக்கு நீ
திசை காட்ட வேண்டும் ..
தொட தொடத்தான்
உயிர் வாசல்
திறந்தாக வேண்டும்..
உன் விரல்
பட படத்தான்
உடலெங்கும்
பூ பூக்க வேண்டும் ...
மட மடவென்று
மனதோடு
இசை பாடவேண்டும் ...
கட கடவென்று
காமன் தீவில்
குடியேற வேண்டும் ..
பட படவென்று
பசியாற வேண்டும் ..
விட விட மனசில்லாமல்
விளையாட வேண்டும் ..
அட இதென்ன அதிசயம் ..
ஆடை தொலைத்த அவசரம் ...
இன்ப நிலை
இது தானோ ...
என்ன விலை தெரியாதோ ...???
இதழில் தொடங்கி
இதயம் தொட்டு
காமன் கப்பல் கரை ஏறும் ..
இளமை முறுக்கில்
இன்பம் சிக்கி
காதல் சிப்பி கனியாகும் ..!!
வெளிச்சம் நின்றதும் ...
தேடல் தொடங்கும் ...
விடியல் கண்டதும்
வியர்வை அடங்கும் ..!!!