தலைமுறை

கஷ்ட்டபட்ட வீடு இவன்
இஷ்டப்பட்ட வண்டி
ஒரு மைல் தூர கல்லூரி
இவன் மயில் வீட்டிற்கு
தினம் பத்து மைல் சேவை
பெட்ரோல் காசு பெற்றவர் லூசு .................
அம்மா அடகு வைத்த வளையல்
அழகாக வந்தது மடிகணினி
முதல் பக்க திரையில்
முத்தம் கொடுத்த நடிகை படம்
அம்மா வளையல்
புள்ளை எவளோ வலையில் ....................
குறைந்த சம்பள அப்பா
கடன் வாங்கிய பணம்
பொறியியல் முடித்த மகன்
முதல் மாத சம்பளத்தில்
காதலிக்கு நெக்லஸ்
எதிர் பாத்த அப்பா
எடுத்து கொடுத்தது காதலிக்கு ...................
அப்பா அம்மா இல்லை
அண்ணன் மனம் வெள்ளை
வாய் கட்டி கொடுத்த பணம்
புது படம் வெளிவர
எவன் தலையிலோ பாலபிஷேகம் - தம்பி
அண்ணன் உழைப்பு
தம்பிக்கு பிடித்ததோ
எவனோ ஒருவன் நடிப்பு ..................
வயது வந்த தங்கை
கல்யாணத்து பணம்
படிக்கட்டுன்னு கொடுத்தா
இரவு கிளபில் அண்ணன்
கல்யாண கனவு தங்கை
கட்டில் தேடும் அண்ணன்.........................
நிலக்கரி சுரங்க வேலை
அப்பா பட்ட கஷ்டம்
வாயில் புகை விட்ட தொடர்வண்டியாய் மகன்
நிலக்கரி வேலை அப்பா, பிள்ளை
முகத்தில் கரி பூசுதப்பா ..................
பென்ஷன் ஒன்னும் வரல
உடம்பு முன்ன போல இல்ல
தட்டமாட்டான் பொண்டாட்டி சொல்ல
விட்டுட்டு போனான் புள்ள
வளத்துவிட்ட அப்பா விட்டு போன புள்ள ...........
நல்ல தலைமுறை
நல்ல சமூகம்