ஜாதிகள் இல்லையடி பாப்பா
கட்டத்தில்
கவனமாய்
தத்தமது சாதியை
கட்டாயமாய் எழுதச்சொல்லி
விண்ணப்பத்தை
வினியோகித்தார்
வகுப்பாசிரியர்....
சத்தத்தின் உச்சத்தில்
பக்கத்து வகுப்பறையில்
பாடலொன்று அலறியது
“ஜாதிகள் இல்லையடி பாப்பா” !!!!!!!!
கட்டத்தில்
கவனமாய்
தத்தமது சாதியை
கட்டாயமாய் எழுதச்சொல்லி
விண்ணப்பத்தை
வினியோகித்தார்
வகுப்பாசிரியர்....
சத்தத்தின் உச்சத்தில்
பக்கத்து வகுப்பறையில்
பாடலொன்று அலறியது
“ஜாதிகள் இல்லையடி பாப்பா” !!!!!!!!