உன்னை நினைத்து
நீ என்னை விட்டுச் செல்லும் பொழுதெல்லாம் என் இதயமும்
உன்னோடுச் சென்றுவிடத் துடிக்கிறதடி!
நீ பார்க்கும் இடங்கலெல்லாம் என் உருவம் தெரிய வேண்டுமென
என் நெஞ்சம் நினைக்கிறதடி!
நீ செல்லும் வழியெல்லாம் நானே உன் பாதங்களைத் தாங்கும்
பாதையாக இருக்கவேண்டுமென என் மனம் ஏங்குதடி!
நீ ஸ்பரிசிக்கும் பூக்களாய் மாறிவிட
என் உள்ளம் காத்துக்கிடக்கிறதடி!
என்றென்றும் உன் நினைவுகளோடு . . . . !