வாழ்க முத்தமிழ் அறிஞர்

தமிழ்க் கடலே கலைஞரே முத்தமிழ் அறிஞரே
தொல்காப்பிய பூங்கா கண்ட அறிஞர் பெருமகனே
குறளோவியம் படைத்து அய்யன் வள்ளுவனுக்கு
நல்ல புகழாரம் சூட்டிய பேராசானே.

ரோமாப்புரிப் பாண்டியன் தந்து தமிழர் பெருமை
உயர்த்திய வரலாற்று நாவலாசிரியரே!

பொன்னர் சங்கர் பாயும் புலி பண்டாராக வன்னியன்
தந்து வரலாற்று நிகழ்வுகளை தற்காலம் காண
புதினங்களாய்ப் படைத்து எழுத்தாளர் வரிசையில்
முன்வரிசையில் காலத்தை வென்று நிற்கும்
தனியொரு இடத்தைப் பிடித்த தமிழறிஞரே.

தமிழ் உள்ளவரை உம்புகழை யாரும் தகர்க்க முடியாது!
பள்ளியிறுதி வகுப்பைத் தேறவில்லை இன்னும்.
எத்தனை தமிழ்ப் பேராசிரியர்கள் உமக்கிணையாய் உள்ளார்.

நான் அரசியலுக்கு அப்பால் பட்டவன்
உம் தமிழ் அறிவால் சிறுவயது முதலே உம் எழுத்தால் ஈர்க்கப்பட்டவன்.

மூத்த குடிமகன் நான் என்றாலும் உம்மைவிட இருப்பத்து ஒன்பது ஆண்டுகள் இளையவன்.

உமது வயதறியா சிந்தனை எனக்கில்லையே எனும் பொறாமை கொண்டவன்.

செம்மொழிக்கு சீர் செய்த செம்மலே
நீர் தமிழ் உள்ளவரை வாழ்க வாழ்க என வாழ்த்துவேன்.
.

எழுதியவர் : மலர் (8-Jun-14, 1:36 pm)
பார்வை : 222

மேலே