அகமணம் புறமணம்
என் குலத்து எதிரியே...
நம் குல சாமி மறந்து போறியேடி ?
கும்பிடற சாமி
குலம் பார்த்து உதவுமா,
குணம் பார்த்து உதவுமா, அம்மா...!
என் குலத்து எதிரியே...
உற்றானும், ஊரானும் கேட்டால்
நான் என்ன சொல்ல?
உதவி கேட்டால்
தெறித்து ஓடினரே ,
அப்படியே ஓடச்சொல்லம்மா...!
என் குலத்து எதிரியே...
உன் புகுந்த வீட்டுப் பழக்கம்
உனக்கு ஒப்புமோ?
அன்பெனும் அஸ்திரத்தை எனக்கு
வரமளிதிருக்கிராயே அம்மா...!
என் குலத்து எதிரியே...
உன் பிள்ளைக்கு
என்ன சாதியோடி?
சாதியால் அல்ல
சாதனையால் அறியப்படட்டும், அம்மா...!
விடிந்து எழுவது மறந்து,
விடியலை எழுப்ப வந்த
என் செல்ல மகளே..
போய் வாடி...!