கணவன் vs மனைவி

கணவன்: செல்லம் எழுந்திருடா நம்பள பார்க்க அப்பா அம்மா வந்திருக்காங்க
மனைவி: கடுப்புடன் கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள வந்துட்டாங்களா ?
வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வர மாட்டாங்க,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துக்குள்ள என் உசுரு போயிடும்
கணவன்: ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத
கேட்டு அவங்க கோவிச்சிகிட்டு போயிடப் போறாங்க...
மனைவி: போனா போவட்டும் அப்படியாவது
புத்தி வருதான்னு பார்க்கலாம் ஐந்து நிடங்கள் கழித்து...
கணவன்: உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடீ...
மனைவி: ஐயா....! ஜாலி
கணவன்: போறப்ப அத்தையையும் மாமாவையும்
பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது
மனைவி: (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா ?
கணவன் (மனதிற்குள் சிரித்துக்கொண்டே )- ஆமாம் ...
மாத்தியோசிக்கப்பட்டது..
இருந்தாலும் சிந்திக்க வேண்டிய ஒன்று....

எழுதியவர் : (10-Jun-14, 1:44 pm)
பார்வை : 233

மேலே