மரணித்துப்பார்

மண்ணிலே உருவாகி
மண்ணிலே மறைகிறாய்......!
மிருக குணம் கொண்டாய்
மனித குணமும் கண்டாய்.......!
நீயே வெறுக்கிறாய்
நீயே அரவனைக்கிராய்.....!
முடிவுகள் உனது கையில்
முடிவிலா மனித கண்ணீர் ......!
உடலை பார்கிறாய்
நீ மனதை வெறுக்கிறாய்......!
கடைசியில் எதை நீ
கொண்டுசெல்ல போகிறாய்......!
காலம் விரைகிறது
நேரம் வீணாகிறது........!
ஆட்சியை நடத்துபவன்
அரசாட்சியும் நடத்துகிறான்.......!
உலகம் யாருக்கு சொந்தம்
நீ சொந்தம் கொள்வதற்கு......!
உனது இறுதி மூச்சில்
உயிர் கொடுப்பவன் யார்......!
அதிகாரம் உனது கையில்
முடிவோ அவன் கையில்.......!