முத்தம் -மரண தண்டனை எறும்புகளுக்காக

சிட்டெறும்பு ஒன்று ..
சட்டென்று தந்த முத்தத்தால் ..
பட்டென்று அறைந்த ..
விரல்கள் ..

இதழ் தந்த முத்தத்தால்
இறந்து போகிறது ..
இந்த எறும்புகள்..

சாகின்ற எறும்புகளுக்காக ..
சட்டம் ஏதும் இல்லை ..
இங்கு
விரல்கள் ஏனோ நிரபராதி ..

சில நொடி தொந்தரவிற்காக ..
மரண தண்டனை
அறிவிக்கும் நீதிபதி ..
மனிதனின் மூளை ..

மனம் எழுதும்
இந்த கவிதை ..என் பிழை ..
எறும்புகளுக்காக ..

#குமார்ஸ் ...

எழுதியவர் : குமார்ஸ் (10-Jun-14, 10:39 pm)
பார்வை : 134

மேலே