எங்கள் வாழ்க்கை
காணவில்லையே ...! காணவில்லையே ...!
மனிதநேயம் கொஞ்சம்
எங்கள் வாழ்விலே
காணவில்லையே ...!
ஏங்கித் தவிக்கிறோம்...வாழ்வை
வாழ நினைக்கிறோம்...
பூக்கும் முன்னரே வாசம் இழந்துவிட்டு
வாடி வதைகிறோம்...!
வண்ண வானவில்லை
வானில் தீட்ட- எங்கள்
வண்ணக் கனவுகளைப்
பறித்துக் கொண்டான்...
அதைத் திரும்ப கேட்கவே
மனது செவிடனாய்
கோவில் உள்ளே சென்று
ஒழிந்து கொண்டான் ...!
பள்ளிக்கூடம் - விட்டுத்
தள்ளிப் போகுதே...
வாழ்க்கை தினம்ஒரு
பாடம் புகட்டுதே ...!
ஓடி விளையாட
நேரமில்லையே ...!
கலாம் காண சொன்ன
கனவில் வைப்பதற்கு
எனக்கொரு வேடமில்லையே...!
காணவில்லையே ...! காணவில்லையே ...!
மனிதநேயம் கொஞ்சம்
எங்கள் வாழ்விலே
காணவில்லையே ...!