நான் காதலிக்கிறேன்
அவள் வளர்த்த பூக்கள்
விரலின் ஸ்பரிசத்தை
உணர்கின்றன!
அவள் தொடுதலை
உணர்ந்து அதன்
மகரந்த தாள்களுக்குள்
அவளை இழுத்து
மறுபடியும்
பிரசவிக்கின்றன!
அவள் முகவடிவ
பூக்களாக!
மின்மினிப் பூச்சிகள்
அவள் உடைதொட்டு
வலம் வந்து
இயற்பியலில்
ஒரு வேதியியல்
மாற்றமென
அவளிடம் உற்பத்தியாகும்
மின்சாரம் கொண்டு
அதனுடலில்
மின்விளக்குகளை
எரியவிடுகின்றன!
அவள் கூந்தலேறியப்
பூக்கள்
சொர்கத்திற்கு செல்கின்றன!
அவற்றிற்கு பாதை
தெரியாமல் போகும்
பட்சத்தில்
அவள் அடிச்சுவடுகளைப்
பின்பற்றி பரகதிக்கு
வழிகேட்கின்றன!
அவள் சுவாசத்தில்
முக்தியடையும்
வார்த்தைகள்
மறுபிறவியெடுக்கின்றன
கவிதைகளாக!
அவள் மேனி பட்ட
தென்றல் காற்று
மலர்தோட்டம் வழிசெல்ல
அஞ்சி மாற்றுவழி
யோசித்தும் கிடைக்காமல்
மலர்களுக்குள்
தஞ்சமாகின்றன
வாசனையாக!
அவள் குளித்து
முடித்த கூந்தலில்
சொட்டும் நீர்த்துளிகள்
மண்ணில் மழையாய்ப்
பொழிகின்றன!
அவளைத் தரிசித்த
என்கண்கள்
காதலுக்காக ஏங்குகின்றன!
அவள் ஜீவ நாடிக்குள்
குடிபுகுந்து
உலகை வலம்வர
என் மனதை தூண்டுகின்றன!
நான் காதலிக்கிறேன்!
காதலிக்கக்
கற்றுக்கொடுக்கப்
போகிறேன்!
காதலர்களுக்கு!
ஆனால் நானோ
வீணாய் போனேன்!
இனியொரு பிறப்பெடுப்பேன்
வீணாய்ப் போன
ஆணாய் அல்ல
மனிதனாய்! மனதுள்ள
மனிதனாய்!
காதலியே உனை
காதலிக்க!
.............சஹானா தாஸ்!
....................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
