பிரியும் பந்தம்

நான் பிறக்குமுன்னே
எனக்காக அழுதவளே...............
நான் பிறந்தேனு நினைச்சியா ?
இல்ல
உன்ன பிரிஞ்சிசென்னு அழுதியா ?

என்னை பெற்றெடுத்த
வலியோட
சுவடுகூட என்மேல
சாராம
வடுக்களையும்
நீ மட்டும்
அடுக்களை கரியைப்போல
சுமந்தாயே ............

சுமக்கும்
மாதம் மட்டும்
இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தால்
நான்
இறக்கும் வரை சுமந்திருப்ப
இல்லன்னா உன்
கருவறை இருக்கும் வரை
வளர்த்திருப்ப ..............

படைத்த பாவி மகன்
பத்து மாதம் மட்டும்
போதுமென்று
பதிவு நகல் எழுதிவிட்டான்
நீ அவனை
மட்டும்
சுமக்காத
பொறுக்காத பொறாமையில ..............

பொத்தி பொத்தி தான் வளர்த்த
பூவொன்று பிரியுதுன்னு
உருக்காம வழியுதடி
உன் கண்ணிரண்டில்
கண்ணீரு................ !!
தூரத்தாம ஓடுதுதடி
நெஞ்சோடு சேர்ந்து
நீ வடிச்ச
உன் கண்ணீரும்..................
நானும் தான் இதுபோல
நாளைக்கும் அழப்போறேன்.
உனக்கான ஆறுதலா ..........

ஆடவனா பிறந்திருந்தா
அத்தனை அவஸ்த
இல்லையேடி
பொண்ணா பொறந்தாதால
பொழியுதடி என்மனசும்
வானம்
அழுற மழைபோல....................

மனசெல்லாம் மறைச்சுக்கிட்டு
மழையென்னு பேர
மாத்தித்தான் வைச்சுக்கிட்டு...................

நீ துணை சேர போறியா?
என்னை விட்டு
தனியாகப்போறியா?
தெரியாம தவிக்குதடி
என்மனசும்
தண்ணிய விட்ட மீனாக....................


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (14-Jun-14, 6:05 pm)
பார்வை : 88

மேலே