காதல்

விரல் கோர்த்து விளையாடிய வயதில் விளையாட்டாய் நீ கேட்டது
நினைவிலேயே நிற்கிறது ...

பருவங்கள் மாறிய பின்பும்
உருவங்கள் மாறிய பின்பும் -இன்னும்
உயிர்ப்புடன் வைத்திருக்கிறேன் நம் காதலை ...

விரல் தீண்டி நீ பேசியது
எத்தனையோ தருணங்களில் -எப்போது
காதல் வயப்பட்டேன் என்பது
இன்னும் நினைவிற்கு வரவில்லை ..

விளையாட்டுக்காதலை விதியோ இணைத்து வைக்க என் காதல் கணவனாய் என் அருகில் நீ ..

காதலின் பரிசு கருவில் நிறைய காதலே நீ இதயத்தில் நிறைந்தாய் ..

எழுதியவர் : நிஷா (15-Jun-14, 3:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே