நானும் அழகு

உலகின் அழகன் நானே!
என்னழகி சொன்னாள் தானே!!
என் முகத்தின்
அறிமுகம் அறிந்தேன்
அவள் சேதியில்
சொன்னதும் உணர்ந்தேன்...
ஆயிரம் பெண்கள் சொன்னது
ஆயினும் மனதோ வெறுத்தது...
அவளின் ஒருசொல் கண்டதும்
அனைத்தையும் நினைத்தது
மனதோ மாற்றம் கொண்டது
தனியே ஏனோ நகைத்தது...
முகத்தினில் வெளிச்சம் நிலைத்தது
அவளின் வார்த்தை வருடியதாலோ
இரவினில் தூக்கம் தூங்கியது
இனிவரும் காலம் என்னாவது?
இந்த ஜென்மமோ
எனது முதலாவது
மீதி இருக்கு ஆறானது
என்றும் நினைத்து
நான் வாழ்வேன்
என்னழகி சொல்லிய
ஒரு சொல்லில்...