அனாதை எனக்கே வாழ்க்கை இனித்ததென்றால்
ஏதோ ஒரு திண்ணையில்
தினம் தூக்கம்
ஊருக்கு வெளியே ஆற்றினில்
ஒரு குளியல்
அரசமரத்தடி பிள்ளையாருக்கு
உடைக்கும் தேங்காய் உணவு
எப்பொழுதோ யாராவது நைவேத்தியம்
செய்யும் சக்கரை பொங்கல் விருந்து
பள்ளி கூட சன்னல் வழியே
கொஞ்சம் படிப்பு
அதை சொல்லி தரும் வாத்தி
பார்த்து விட்டால் ஓட்டம்
பழயதை சிலர் கருணையுடன்
தருவதால், இரண்டொரு உடுப்பு
பல கை வேலைகள் செய்து
சம்பாதிப்பதால், கையில் ஒன்றிரண்டு
காசுகள்
படிக்க மனம் இருந்ததினால்
கற்றேன் பல வழிகளில்
சிரிக்க கொஞ்சம் உணர்வு
இருந்ததினால் சிரித்தேன்
பல நேரங்களில்
வாழ்க்கை சுமை என தோன்றும்
சில நேரங்களிலே
அதிலும் ஒரு சுகம் இருப்பதை
உணர்ந்தேன் பல வேளைகளில்
சிந்தியுங்கள் அனைவருமே
யாரும் இல்லாத அனாதை
எனக்கே வாழ்க்கை இனித்ததென்றால்
ஊரும், உறவும், இல்லமும், அதில்
கருணை உள்ளமும் உள்ளவற்க்கு ஏனையா?
வாழ்வில் வெறுப்பு
வாழுங்கள் சிரிப்புடனே வாழ்க்கையை,
சந்தியுங்கள் வரும் சோதனைகளை
மன உறுதியுடனே