மீசை

தாளிடப்பட்ட
குளியலறையில்
ஆளுயர கண்ணாடியின் முன்
தடவி தடவி தேடினேன்
வளர்வது போன்ற
பிரம்மை கொண்ட மீசையை...
++++++
முறுக்கி முறுக்கி
மெருகேற்றும்
அப்பாவின் மீசையை
காணும் போதெல்லாம்
ஏதோ ஒரு ஈர்ப்பு...
இன்னும் எனக்கேன் இல்லை
என்ற தவிப்பு
++++++
ஷாருக்கானும்
ஆமீர்கானும்
அழகென்று
அள்ளிவிடும் நண்பர்களை
அறையத் தோன்றுகிறது
மீசையில்லா கன்னம்
மொழு மொழு கிண்ணம்....
++++++
முதல் காதல் சொன்னபோது
அவள் சொன்னாள்
இன்னும் மீசை கூட வளரல
அதற்குள் காதலா?
ஓ....காதல் சொல்ல
மீசை தேவையோ....?
+++++++
கரு கரு மீசை கொண்ட ஆணை
குறு குறு பார்வை
பார்க்கும் பெண்கள்
சொல்லாமல் சொல்கின்றனர்
மீசையின் கவர்ச்சியை....
வாலிபத்தின் கிளர்ச்சியை.....
+++++++
மீசை என்பது
ஆண்மையின் அடையாளம்
ஆளுமையின் சுவடு ்
ஹார்மோன்கள் வரையும்
ஹார்மோனியம்
பருவம் வரைந்திடும்
கருப்போவியம்
+++++++
வாலிபம் வளைந்தோடும்
தேசிய நெடுஞ்சாலை
பருவம் கொடுக்கும்
இளமையின் பூஞ்சோலை
துடிக்கிறது கரங்கள்
தொட்டு மகிழ்ந்திட ்
விரும்பி கேட்கின்றேன்
அரும்பு மீசையினை....
+++++++
மீசை நீவி
நெஞ்சம் உயர்த்தி
சிங்கமென கர்ஜிக்கும்
அந்த நாள் வாராதோ....?

எழுதியவர் : சித்ரா ராஜ் (20-Jun-14, 9:59 pm)
Tanglish : meesai
பார்வை : 2918

மேலே