அவளுக்கு அடையாளம்
அழகியதோர் முகமிருக்கும், முகமுழுதும் கனிவிருக்கும்;
குயில்போல பேச்சிருக்கும், பேச்செல்லாம் பணிவிருக்கும்;
மீனொத்த விழியிருக்கும்; பார்வைத் தரைமீதிருக்கும்;
பால்வண்ணத் தோலிருக்கும்; பூக்காம்புக் காலிருக்கும்;
மூடிக்கொண்ட உடையிருக்கும்; ஆடிக்கண்ட நடையிருக்கும்;
இல்லாத இடையிருக்கும்; பொல்லாத அசைவிருக்கும்;
தரைதட்டும் சிகைநீளம்; ஆழியவள் மனஆழம்;
காளையர்க்கு கடிவாளம்; இஃதேயவள் அடையாளம்..!