இக்கலிகாலக் கல்வி

புத்தகங்கள் தின்றுதின்று,
பக்கங்களை மென்றுமென்று,
பரீட்சையிலே துப்புகின்ற
படிப்பெதற்கு போதோழா!

கணிப்பானை தட்டிதட்டி,
குறிப்பேட்டில் முட்டிமுட்டி,
சூத்திரங்கள் வேதங்கள்
ஆனதிங்கே பார்தோழா!

மூளைகளை மாடாக்கி,
தேர்வுகளை நிலமாக்கி,
எழுதுகோல் கொண்டுஉழும்
கொடுமையைக் கேள்தோழா!

எண்ணங்களை எரித்துவிட்டு,
கற்பனைகள் கொன்றுபோட்டு,
கல்வியென்று களிமண்ணைத்
தின்னும்நிலை தான்தோழா!

மனப்பாடம் செய்போதும்;
மனம்மழுங்கித் தான் போகும்;
உன்னையிங்கு மதிப்பெண்தான்,
நிர்ணயிக்கும் போதோழா!!!

எழுதியவர் : jeany (23-Jun-14, 12:31 pm)
சேர்த்தது : jeany
பார்வை : 51

மேலே