பாட்டுடைத் தலைவன்
பாட்டுடைத் தலைவனவன் -என் கூந்தலுக்கு
காட்டுமல்லி சூட்டியவன்
வீட்டோடு பிரித்தவன் -என்னெற்றிக்கு
பொட்டொன்று தந்தவன்
நானாநிரை மேய்க்க ஆடிப் பாடி சென்ற போது
தேனிறைய தந்து தெவிட்டியவன் அவனல்லவா
நாநீராடும் துறைக்கு நீராட போனபோது
நன்மஞ்சள் குங்குமம் கொடுத்தது அவனல்லவா
மருதாணி விரல்பிடித்து மந்திரங்கள் செய்தான்
மறுபடியும் எனைப்பார்க்க தந்திரங்கள் செய்வான்
சிறுவாணி ஆற்றில்வந்து தூண்டில் போட்டான்
சிக்கிய தாவணியில் சில்மிசங்கள் செய்தான்
இளம்பச்சை தாவரத்தில்
என்னவோ பாசை சொன்னான்
அடுத்த நாளே எல்லாமும்
பூத்துகுலுங்க பார்த்து சிரித்தான்
தெருவோரம் இவன் போனால்
ஜன்னல் கதவுகள் திறந்து மூடும் .
.ஜன்னலுக்கு பின்னாலே
பௌர்ணமிகள் வந்து போகும்
மூங்கில் தோளனிவன்
முன்னூரும் படைவீரனிவன்
முன்னே அவன் செல்ல
மூன்றடி பின்னே நான்செல்ல பொருத்தம்
ஏங்கி முடங்கிருக்கும் ஏகப்பட்ட மகளிருக்கோ
கண்ணிரெண்டும் வருத்தம் .
வீட்டோடு =வீட்டு +ஓடு, முன்னூரும்=முன் + ஊரும் =முன்வரிசையில் போகும் ,நானாநிரை=நான் +ஆநிரை (பசு கூட்டம் )