பரிசம்
தங்கம் போல என் அங்கத்தையும்
உரசிச் சோதித்தாய்
சொக்கத் தங்கம் என்று எனைச்
சொன்னது இதற்குத்தானா
உன்னைப் போல முலாம் பூச
எனக்குத் தெரியாது
உள்ளதை உள்ளபடி முகம் பேச
உனக்குத் தெரியாது
அங்கப் பரிசு எதிர்பார்த்து
அங்கப் பரிசம் செய்தாய்
எங்கும் தரிசு என்பதால்
பங்கம் செய்தாய் காதலை
தொட்டுப் பார்த்து சுவைத்த காதல்
விட்டுப் போகும் விரைந்து
எட்ட நிற்க பதைக்கும் காதல்
கிட்ட வரும் நிறைந்து