தலை எழுத்து - நாகூர் லெத்தீப்
அறியப்படாத
எழுத்து
நம்மிடம் சேர்ந்து
வருகிறது.......!
இறுதியை யார்
அறிவார்
இருளையும் யார்
தெரிவார்.......!
நிலையற்ற
உலகம் உனது
அருகிலே வா
என அழைக்கிறது..........!
முடிவை
தெரிந்தும் பயம்
அறியாத
அறியாமை மனிதன்.........!
வேடிக்கையான
வாழ்க்கை
வாடிக்கையான
போராட்டம்......!
கடைசியில்
கொண்டு செல்வது
உனக்கு
தெரியுமா
நீ இருந்தால்.........!
வெளிச்சமிட்டும்
மறையும்
விளக்கே நீ
தானே மானிடா .......!
உன்னை நீ
தெரிய உனக்கு ஏன்
தயக்கம்
உலகிலே
ஏன் மயக்கம்.......!
சோதனை
இல்லாத நிம்மதி
வாழ்விலே
காண்பது எப்படி.........!
அவன் எழுதிய
எழுத்தை
யார் தான்
மாற்றமுடியும்..........!
நீ விரைந்து
செயல்படுவது
உனது
முடிவை நோக்கியே
மானிட..........!