வெள்ளை மனம்

சொன்னதைச்
சொல்ல வேண்டாமென
சொல்லி வைத்தேன்.
சரி என்று தலையாட்டி
சற்று நேரத்திலேயே
சொல்லி மகிழ்ந்தது
குழந்தை.

எழுதியவர் : பொன்.குமார் (11-Mar-11, 7:34 am)
Tanglish : vellai manam
பார்வை : 448

மேலே