இதயம் தந்த தாய்க்கு

கனத்த இதயத்தோடு, ஒரு கணமும் யோசிக்காமல், மகனின் இதயம் தந்த இதயமே

உன் மகனின் இதயம் வேரு ஒரு மகளுக்கு சொந்தமாகி வாழ்ந்துக்கொண்டிருக்கிறது
ஒரு மகனை இழந்து, ஒரு மகளை பெற்றிருக்கிறாய்

ஒரு இதயத்தைதான் நீ இழந்தாய், ஆனால் பல கோடி மக்களின் இதயங்களில் புகுந்தாய்.

உன் மகன் லோகநாதனின் இதயநாதம் ஒரு உடலில் மட்டுமல்ல,
உலகில் உள்ள எல்லா இதயங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

மகனின் இதயத்தை தந்த நீ, ராஜலக்ஷ்மி அல்ல
நீ ஒரு தைர்யலட்சுமி.

மகனின் உடலுக்கு வாய்க்கரிசி போடும் முன்
ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு அட்சதை போட்ட தாயே.

உன் மகனின் இதயம் மாற்று உடலுக்கு சென்றதால்
மலர் மருத்துவமனையில் மலர்ந்தது ஒரு உடல்.

உடல் உறுப்பு தானம் என்ற முழக்கத்திற்கு செவிகொடுத்து செயல்படுவோம்
செவிலித்தாயின் செயலுக்கு பாராட்டுவோம்.

இறந்தபின் மண்ணில் மக்கும் உடல் உறுப்புக்களை,
உயிர் பிச்சை கேட்கும் உயிர்களுக்கு தந்திடுங்கள்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் மூர்க்கர்களே
சென்னைக்கு வாருங்கள் இதயங்களை கூட தருகிறோம்.

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (24-Jun-14, 2:55 pm)
பார்வை : 290

மேலே