திரு நங்கைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
எங்கள் காதலை ,
ஒற்றை வரியில் கூட,
சொல்லிட முடியும்...
ஏற்பாரில்லை...
காவியங்களாக வடிக்கலாம்,
புரிந்து கொள்வாரில்லை...
காதல்... காதல்...
என்று கதறுவோம்...
காமம்... காமம்...
என்று முழங்குவார்கள்...
எங்கள் இதயத்தோடு கனவு
வாழ்க்கை நடத்த.,
சமுதாயம் ஓரங்கட்டும் ...
எங்களை...
கேலிப்பேசும் வாய்கள் ...
நீளுமே தவிர...
ஆறுதல் சொல்ல
ஊமையாகிப்போகிறது...
இந்த சமுதாயம்...
பகல் பொழுதினைப்போலவே,
எங்கள் சுமைகளும்,
அதிகம்...
இரவுகளிலும் தொடர்கிறது,
எங்கள் வாழ்க்கையின் வலிகள்...
உறவுகளின் ஏளனப்பார்வையும்,
ஊரார்களின் கேவலப்பார்வையும்,
கொத்தி தின்னும் எங்கள் மனதை...
வாழ வழி தெரியாமல் ,
வாழ்க்கையை விற்கிறோம் ..
நாங்கள்...
ஒதுங்கி நிற்கிறது சாதி,மதம்,சமுதாயம்...
எங்களை விட்டு...
நாங்கள் திரு நங்கைகள்...!