பொய் மூட்டைக்காரி - நாகூர் லெத்தீப்
பொய்முகத்தை
வஞ்சமிட்டு வரலாற்றை
தன் கதைபோலே
திரிக்கிறது ஆடுது...........!
புதைக்க நினைக்கும்
வரலாறு பொய்யாக
சித்திரிக்க முனையும்
பதுங்கிய நாய் இதோ.......!
சொந்தக்கத சோக கத
எல்லாம் வரலாற்றிலே
பதறுகள் இணைக்கிறது
பாவமா இருக்குது..........!
கூத்தாட்டம் போலா
நினைச்சு மதவாதத்த
வழக்க நினைக்குது
காவிகள் உருவிலே
வஞ்சக பேச்சை
திணிக்க நினைக்கிது.........!
முறிக்கி சக்கை பிழிந்து
பாவம் பதுமை புதுமை செய்ய
ஆராவாராமாய் ஆடுது
பேணு எடுக்குது ஜாதியிலே..........!
உண்மையை மறைத்து
பொய்யை மூட்டை கட்டி
தெருவோரம் முட்டை
விக்க வரங்கொ பாத்து
பக்குவமா பொய்களை
பொறிக்கிராங்கோ.........!
இந்திய சுதந்திரம் இனத்தை
கடந்து மதத்தை கிழித்து
துவைத்து ஒரே இனமாய்
ஒன்றிணைந்த வாங்கிய
சுதந்திரத்தாயை மானத்தை
பறிக்க நினைக்கும் ஜாதி
வெறியர்கள் போலிகளே.........!
வந்தே மாதரம் என
முழங்குவோம் ஜாதி
வெறியர்களை அடக்குவோம்..........!
எல்லோரும்
ஒன்றுபடுவோம் இந்திய
பாரதத்தின் பெருமையை
நிலை நாட்டிவோம்...........!