வெட்டுக வீழ்த்துக

காமக்கயவர்கள்,
தன் புண்ணைத்தின்றே வயிறு வளர்க்கும் செந்நாய்கள்!
விரும்பிடின், அவை மண்ணைத் தின்னும்!
தின்றபின்னே மயங்கிக் கிடக்கும்! - பின்
மாத்திமிர் குருதியில் தோய்ந்து போய்விடின்,
பெண்ணைத் தின்று,
பெருங்கூத்தாடுமிக் கொடும்பேய்கள்!
இவற்றுக்கு அன்னையுங்கூட பொருட்டாமோ?!
வேண்டிடின், அவளையுங்கூடி களிநடம்புரியும் - இங்கே
தென்னையை நட்டு வளர்த்தாலும் - அது
நாளொரு மேனியில் நாம்தின்றுமகிழநற் தெங்கனி தருமே?!
இப்பன்றிகளாலிங் கென்னபயன்? - அவை
செல்லு மிடமெலாம் சீர்கெட்டழிந்ததே கண்ட பயன்!
வேண்டி வரமாய்ப் பெறுகின்ற பிஞ்சுகளைப் பிய்த்து
தூண்டில் புழுவாய் வதைத்துத் தூக்கிலிட்டுபின் தோண்டி,
மண்ணுள் புதைக்கின்ற காமுகரைக் காணுங்கால்,
கூர்த்த வாளால் கூ றிடுக!
அக்காம மிருகத்தின் கன்னத்திலறைக! காறிஉமிழ்க!!
கண்களிரண்டையும் பிடுங்கிநம் காக்கைகட்கிடுக!
மாத்தவ மாந்தரையெல்லாம் அன்று,
மட்ட மாக்கள் கூட்டற்பலகையில் சாய்த்தனரே - இந்தப்
பேய்த்தவ மாக்கள் வீதியில் திரிவது முறைபடுமோ?!
வெட்டுக!
வாழைபோல் நிலமிசை சாய்த்திடுக!
நாய்களும் நிலந்தனில் நால்வர்க்கேனும் நயந்திருக்க,
இந்நாயினுங் கீழரைக் கீறியெருவாய் இறைத்திடுக!
எருவாயாயினும் பயன்படலால் – பின் மறுவாழ்விருப்பின்,
அகமது மலர்ந்து அக்கணமாயினும் மாநுடம் நாடிடட்டும்!!


********************************************
- சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (25-Jun-14, 5:55 pm)
பார்வை : 1349

மேலே