காதலின் குரல்

இலைகள் வேண்டாமென்று மரங்கள் நினைத்ததில்லை
உயிர் வேண்டாமென்று உடல் நினைத்ததில்லை
கடவுள் வேண்டாமென்று மனிதன் நினைத்ததில்லை
மனிதன் வேண்டாமென்று கடவுளும் நினைத்ததில்லை
பார்வை வேண்டாமென்று விழிகள் நினைத்ததில்லை
தன் குழந்தைவேண்டாமென்று அன்னையும் நினைத்ததில்லை
அதுபோலத்தான் உன் காதல் வேண்டாமென்று
ஒரு போதும் நான்நினைத்ததில்லை
ஆனால் என்னை வேண்டாமென்று நீ ஏன் நினைத்தாய் ???

எழுதியவர் : பிரிசில்லா (25-Jun-14, 7:07 pm)
Tanglish : kathalin kural
பார்வை : 62

மேலே