விடியல்

மேகங்கள் ஒன்று கூடினால்
மழை வரும்
சோகங்கள் ஒன்று கூடினால்
கண்ணீர் வரும்
வேர்கள் ஒன்று கூடினால்
அசையாத மரம் வளரும்
தோல்விகள் ஒன்று கூடினால்
வெற்றிக்கான வழி பிறக்கும்
அது போல தான்,
தமிழர்கள் நாம் ஒன்று கூடினால்
ஈழத்தில் புது விடியல் மலரும் ???