அன்புள்ள அண்ணா நிஜந்தன்

அன்பினால் ஒரு உலகம்
எனக்கு நீ தந்தது ...
அன்பிற்காக ஒரு கவிதை
ஏதோ என்னால் முடிந்தது...


ஒரே கருவில் பிறந்திருந்தால்
அண்ணனாக மட்டும் இருந்திருப்பாய்
ஒரே கருத்தில் பிறந்ததால்
அன்னையாகி சுமக்கிறாய்...


உன் அன்பு எனும்
மழையில் நனைக்கிறாய் பின்
கோபக் குடை கொண்டு
ஏன் எனை தடுக்கிறாய்...


மறு ஜென்மம் ஒன்றிருந்தால் ஒரே
கருவினில் பிறக்கவேண்டும் அண்ணா...
உன் மடியினில் தொட்டில்
வேண்டும் அண்ணா...

செல்லமாய் அடிக்க வேண்டும் அண்ணா
நீ வலிப்பது போல் நடிக்க வேண்டும் அண்ணா...
மனதிலே கவலை வேண்டும் அண்ணா அதை
உன் தோள்களில் மறக்க வேண்டும் அண்ணா...


மகளை பெற்ற தந்தைக்கு
மட்டுமா தெரியும்...?
தங்கை கொண்ட அண்ணனுக்கும்
தெரியும்...
முத்தத்தில் காமம் இல்லை என்று...


பிரியமுடன் உன்னை என்றும் பிரியாத தங்கை....

எழுதியவர் : காவ்யா (28-Jun-14, 12:08 pm)
பார்வை : 658

மேலே